அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு குழுக் கூட்டம் இன்று 6ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு குழுக் கூட்டம் இன்று 6ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.

(அஷ்ரப் ஏ சமத்)
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் ஆகின்றன. இந் நிறுவனத்தினை காலம் சென்ற கொழும்பு சாஹிராக் கல்லுாாி அதிபர் சாபி மரிக்கார் அவர்கள் ஆரம்பித்து வழிநடத்தினார்கள்.
அவர்களுக்கு பின் காலம் சென்ற பேராசிரியர் ஹூசைன் இஸ்மாயில் தலைமை வகித்தார். அவர் காலமானபின் கடந்த கொவிட் 19 மற்றும் நாட்டின் நிலைமைகள் இவ் கல்விமாநாடு இயங்கமுடியாமலிருந்தது.
கடந்த மாதம் கொழும்பு சாஹிராக் கல்லுாாி அதிபர் சட்டத்தரனி ரிஸ்வி மரிக்கார் அவர்கள் தலைவராகக் கொண்டும் ,செயலாளர் ஓய்வுபெற்ற அதிபர் எம்.எம்.எம். றில்வான் உப செயலாளர் கல்வியமைச்சின் முஸ்லிம் பிரிவு நஜிமுத்தீன் பிரதித் தலைவர் என்.எம். அமீன், மற்றும் கலாநிதி ஜெ.டி கரீம்டீன், பேராசிரியை பரினா ருசைக், கொழும்பு ஹமீத் அல் ஹூசைனியா மற்றும் கொழும்பு பாத்திமா மகளிர் பாடசாலை அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உட்பட கல்வித்துறை,அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பிரநிதிகள் , அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் முன்னனியின் தலைவர் சாம் நவாஸ் உட்பட முன்னாள் ஆசிரிய ஆலோசகர் ஹமீட் ஆகியோர்கள் கொண்ட நிர்வாகக் குழுவொன்றும் தற்பொழுது இயங்கி வருகின்றது.
இன்று 6.01.2024 கொழும்பு சாஹிராக் கல்லுாாியி
இம் மாநாட்டின் 60 மாநாடு இவ் ஆண்டு நடத்தவதற்கும் இலங்கையில உள்ள முஸ்லிம் பாடசாலைகள், மாணவர்கள் ஆசிரியர்கள் கல்விஅதிகாரிகள், சிங்கள மொழி மூலம் ஆங்கில மொழி முல மாணவர்கள் விபரங்கள் அங்குளள குறைபாடுகள்,பௌதீக வளகுறைபாடுகள் மற்றும் உயர் கல்வித்துறையில் பல்கலைக்கழக தரவுகள் மார்க்கல்விப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கான ஓர் அறிக்கை சமர்ப்பித்தல்,
ஒவ்வொரு 3 மாதங்களுக்கொரு முறை இவ் குறைபாடுகளுடன் பாராளுமன்றத்தில் உள்ள சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிணர்களை சந்தித்து அவர்களுடன் இக் குறைபாடுகள் பற்றி கலந்துரையாடுதல் , மற்றும் கல்விக் கல்லுாாிகள் பிரச்சினைகள், மௌலவி ஆசிரியர் நியமனம், முஸ்லிம்் மாணவிகள் வேறு மொழிகளில் பயிலும் பாடசாலை களிலும் எதிர்நோக்கும் சீருடைப் பிரச்சினைகள்
உயர் கல்வித்துறை மற்றும் பட்டதாரிகளை இலங்கை கல்வி நிருவாக சேவை ,கல்விக் கல்லுாரி போதானாசிரியர்கள், விரிவுரையாளர்களாக தமது விகிதாசாரத்திற்கேற்ப கடமையாற்ற அவர்களை ஊக்கப்படுத்தல் , வட கிழக்கு வெளியே உள்ள கல்விக் கல்லுாாிகளில் பிரச்சினைகள் தர்ஹா நகர் கல்விக் கல்லுாாிகளில் கற்பதற்காக ஊக்கப்படுத்துதல் தற்பொழுது அங்கு 25 வீதமான முஸ்லிம் மாணவிகளே மட்டுமே கல்வி கற்கின்றனர். தர்ஹா நகர் மற்றும் அட்டாளைச் சேனை ஆகிய இரண்டு கல்விக் கல்லுாாிகளுக்கும் முஸ்லிம் அதிபர்கள் நியமிக்கப்படாமை போன்ற பிரச்சினைகள் ஆராயப்பட்டன.

418110590_10225397410182057_6833076460748877888_n.jpg417935979_10225397410542066_4574952620165378742_n.jpg418091312_10225397407221983_6428630864678154151_n (1).jpg416983732_10225397410262059_2328038689683312743_n.jpg418083567_10225397409862049_4583707646335955025_n (1).jpg418083567_10225397409862049_4583707646335955025_n.jpg418091312_10225397407221983_6428630864678154151_n.jpg416498231_10225397409742046_6210871068526634360_n (1) - Copy.jpg