(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தர பரீட்சை இன்று ஆரம்பித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரீட்சை நிலையங்களாக உள்ள பாடசாலைகளிற்கு மாணவர்களை மிகுந்த ஆர்வத்துடன் பெற்றோர் பாடசாலை வளாகத்திற்குள் வழியனுப்பி வைத்ததை எம்மால் அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பில் உள்ள ஐந்து வலயங்களில் நிறுவப்பட்டுள்ள 45 பரீட்சை நிலையங்களில் சிறந்த முறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பரீட்சை ஆரம்பித்துள்ளதுடன், மாணவர்கள் பரீட்சைக்காக ஆர்வத்துடன் வருகை தந்தமையினை காணமுடிந்தது.