(அஸ்ஹர் இப்றாஹிம்) மலையக பகுதியில் கரம் விளையாட்டு துறையை மேம்படுத்தும் வகையில் மெரினாஸ் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த திறந்த கரம் போட்டி மெராயா தேசிய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் 50 விளையாட்டு கழகங்கள் பங்கு பற்றியன. தனி நபர் போட்டியில் எஸ் .டிலான் முதலாமிடத்தையும், பி. கபிலாசும் இரண்டாம் பெற்றனர்.
இரட்டையர் போட்டியில் பங்குபற்றிய ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி மாணவர்களான புஷ்பராஜ் துவாரக்ஷான், சிவகுமார் பிரகதீஸ் ஆகிய இருவரும் இணைந்து மிகவும் சிறப்பாக விளையாடி அனைத்து சுற்றிலும் வெற்றிப்பெற்று, இறுதி சுற்றுக்கு தெரிவாகி பார்வையாளர்களின் அமோக வரவேற்புடன் 2023 ஆண்டுக்கான சாம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்டனர்.