கல்வி அமைச்சு மற்றும் டவர் அரங்க மண்டபம் நடாத்திய நாடக விருது விழா.

(அஸ்ஹர்   இப்றாஹிம்) கல்வி அமைச்சு மற்றும் டவர் அரங்க மண்டபம்  இணைந்து நடாத்திய நாடக விருது விழா-2022/2023   மருதானை எல்பின்ஸ்டன் மண்டபத்தில் பிரதம மந்திரி தலைமையில் நடைபெற்றது.
புத்தசாசன சமய மற்றும் கலாசார அமைச்சர், செயலாளர், பேராசிரியர் சி. மௌனகுரு மற்றும் அரங்கத்துறை சார்ந்த பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இவ்விருது வழங்கும் விழாவில்  முதலாம் இடத்தை   வவுனியா இந்துக்கல்லூரியும் இக்கல்லூரிக்கு சிறந்த மேடை வடிவமைப்பு விருதும்,  சிறந்த இயக்குனர்  விருதும் வி.விஜயகுமாருக்கும், சிறந்த துணை நடிகை விருது நிலோஜினி ஜெகதீஸ்வரனுக்கும்,  சிறந்த தயாரிப்பில் முதலிடமும் கிடைத்தது.
இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரியும், இக் கல்லூரிக்கு  சிறந்த துணை நடிகைக்கான விருது ஸ்ரீஸ்கந்தராசா ஜதுர்சிகாவிற்கும்,
சிறந்த நாடக பிரதியாக்கத்திற்கான விருது  ஸ்ரீலேகா பேரின்பகுமாருக்கும்,  சிறந்த தயாரிப்பில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
மூன்றாமிடத்தை கொழும்பு  இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியும், இக் கல்லூரிக்கு  சிறந்த வேட உடை வடிமைப்பாளருக்கான விருது பா.நிரோஷனுக்கும், சிறந்த நாடக பிரதியாக்கத்திற்கான விருது  பா.நிரோஷனுக்கும், சிறந்த தயாரிப்பில் 3ம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
சிறந்த ஒப்பனையில் பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவி டிலக்ஷியாவும்,சிறந்த இசையில்  நுவரெலியா ஹைலன்ட்ஸ் கல்லூரி மாணவன் சோ.சுந்தர பிரசாந்தும்,
சிறந்த துணை நடிகராக யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி மாணவன் ஞா.யுவனும், சிறந்த நடிகராக தமிழ் நுவரெலியா ஹைலன்ட்ஸ் கல்லூரி மாணவன் தமிழ்மாறன் றொட்னி மரூசும் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர்.