நானாட்டான் பிரதேச செயலாளராக நியமனம் பெற்றார். திருமதி கனாகாம்பிகை சிவசம்பு அவர்கள்.

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் நானாட்டன் பிரதேச செயலகத்துக்கு புதிய செயலாளராக திருமதி கனகாம்பிகை சிவசம்பு அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்.

இவர் தனது பதவியை திங்கள் கிழமை (01) காலை பொறுப்பேற்றார்..

நானாட்டான் பிரதேச செயலாராக பதவியேற்றுள்ள திருமதி கனகாம்பிகை சிவசம்பு அவர்கள் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச உதவி செயலாளராகவும் பின் மன்னார் பிரதேச செயலாளராகவும் பின் உதவி செயலாளராகவும்   கடமை புரிந்து வந்த நிலையிலேயே  திருமதி கனகாம்பிகை சிவசம்பு அவர்கள் தற்பொழுது நானாட்டான் பிரதேச செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.

2017 ம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை நானாட்டான் பிரதேச செயலாளராக கடமை புரிந்து வந்த மாணிக்கவாசகர் சிறீஸ்கந்தகுமார் அவர்கள் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) நியமனம் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்தே இப்புதிய நியமனம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.