ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினால்  வவுனதீவு , நரிபுல்தோட்ட பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கி வைப்பு.

(அஸ்ஹர் இப்றாஹிம்) ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் உன்னதமிக்க சேவையின் பலனாக புதிய இல்லம் மற்றும்  மலசலகூடம் என்பவற்றை நிர்மாணித்து பயன்பெறும் குடும்பத்தினரிடம் வழங்கி வருகின்றது.
அந்த வகையில்  ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 97 ஆவது இல்லமும் அதே சமயம்  மட்டுநகரைச் சேர்ந்தவரும் தற்போது  சுவிஸ் தேசத்தில் வசிக்கின்றவருமான நவநாதன் நவநீதன் சொந்த நிதியில் நிர்மாணிக்கின்ற 2  ஆவது இல்லமும் பயன்பெறுநரிடம்  வழங்கி  வைக்கப்பட்டுள்ளது.
இவ் இல்லமானது கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு  மாவட்டத்தில்  வவுனதீவு பிரதேசத்திற்குட்பட்ட நரிபுல்தோட்டம்  எனும்  கிராமத்தில்  பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்ற  குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.