மட்டக்களப்பு வெள்ளத்தில் மூழ்கியது 56 குடும்பங்கள்  முகாமில்.

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தொர்ந்து பெய்துவரும் மழையினால் மாவட்டத்தில் தாழ் நிலப்பகுதிகள் மழை வெள்ள நீரினால் மூழ்கியுள்ளதுடன்  தொடர் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளமாவட்டத்தில் பல இடங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இடைத்தாங்கள் முகாமில் 56 குடும்பங்கள் தங்கவைக்குப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் வெளியிட்டுள்ளது

சீரற்ற கால சநிலை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதனால் மாவட்டத்திலுள்ள கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிரானுக்கும் புலிபாஞ்சகல் பகுதிக்குமான வீதியின் மேலாக வெள்ள நீர்பாய்ந்து செல்வதனால் கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு வரையிலான பிரதேசத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதையடுத்து படகு சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது

அவ்வாறே ஆற்று வெள்ளம் காரணமாக செங்கலடி  பிரதேச செயலக்பிரிவிலுள்ள ஈரலக்குளம் மற்றும் மயிலவெட்டுவான் மற்றும் சித்தாண்டி தொடக்கம் பெருமாவெளி வரையான பிரதேசங்களுக்கான போக்குவரத்து பாதிப்பட்டுள்ளதையடுத்து 02  படகுசேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வாகரை பிரதேச செயலப் பிரிவில் ஆற்று வெள்ளம் காரணமாக கல்லரிப்பு பிரதேசத்தில் மழைவெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்ததையடுத்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதையடுத்து அவர்களை படகுகள் உழவு இயந்திரங்கள் மூலம் மீட்டு பொது கட்டித்தில் 17 குடும்பங்களையும், கதிரவெளி ஜூனியர் பாடசாலையில் 30 குடும்பங்களையும், கல்லரிப்பு முன்பள்ளியில் 9 குடும்பங்கள் உட்பட 56 குடும்பங்களை தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் இன்று திங்கட்கிழமை பகல் 12 மணியின் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

அதேவேளை பகல் 2 மணியின் பின்னர் மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருவதனால் பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்;ளதால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வயல் நிலங்கள் வெள்ள காடாக காட்சியளிப்பதுடன்  இன்னும் பல கிராமங்களுக்கு மற்றும் பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.