கலங்கரை தீபங்களுக்கு கௌரவிப்பு விழா.

(ஏ.எஸ்.மௌலானா)  அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கல்வி பயின்று 1997ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், தமது ஆசிரியர்களின் உன்னத சேவைகளைப் பாராட்டும் பொருட்டு ஒழுங்கு செய்திருந்த கலங்கரை தீபங்களுக்கான கெளரவிப்பு விழா அட்டாளைச்சேனை யாடோ விடுதி மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்றது.
மேற்படி மாணவர் குழாமின் நடப்பாண்டு தலைவரும் மொரட்டுவ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி றிஸ்வி நூர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தரம்-01 முதல் க.பொ.த. உயர்தரம் வரை கல்வி போதித்த 55 ஆசிரியர்கள் இதன்போது பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
அத்துடன் நிகழ்வின் ஞாபகார்த்தமாக கலங்கரை தீபங்கள் எனும் மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.