மன்னார் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் மூன்று அடிப்படையான விடயங்கள் விவாதிக்கப்பட்டன.

வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் இராஜாங்க அமைச்சரும் மன்னார் , முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் இணைத் தலைவருமான கே.காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.

இதில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் , வினோதநோகராதலிங்கம் , திலீபன் மற்றும் வட மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பண்டுள்ளசேன உட்பட வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் , ஆணையாளர்கள் , பணிப்பாளர்கள் , திணைக்கள அதிகாரிகள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மூன்று விடயங்களை அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கப்பட்டன.

அதாவது மன்னார் மாவட்டத்துக்குரிய இவ்வாண்டு நடைமுறைப் படுத்துவதற்கான அனுமதி திட்டம் சமர்பிக்கப்பட்டது.

அடுத்து கடந்த மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புகுழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

மேலம் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் பிரதேச செயலங்களினாலும் முன்மொழியப்பட்டுள்ள தீர்க்கப்படாத பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு முடிவு எடுப்பதற்கான ஒரு கூட்டமாக இது அமைந்திருந்தது.