இளைஞர்களுக்கான சுயதொழில் வழிகாட்டல் பயிற்சி.

(எருவில் துசி) ம.தெ.எ.பற்று பிரதேச சபையினால் 2023ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில்  திட்டமிட்டதன் பிரகாரம் தொழில் வழிகாட்டல் பயிற்சி 28.12.2023ந் திகதி பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேசத்தில் தொழில் வாய்ப்பற்றிருக்கும் இளைஞர் யுவதிகளை இனங்கண்டு மேற்படி பயிற்சி நெறியானது சபையின் செயலாளர் சா.அறிவழகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது நிகழ்வுக்கு வளவாலராக டி.ஜே.சாஜீனி கால் நடைகள் வைத்திய அதிகாரி அவர்கள் பங்கு பற்றியிருந்தார்.