வெள்ளநீரை வெளியேற்றும் ம.தெ.எ.பற்று பிரதேச சபை. (Video)

(எருவில் துசி) கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமக களுவாஞ்சிகுடி பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுளளது.

குறிப்பாக களுவாஞ்சிகுடி, எருவில், பட்டிருப்பு மகீழுர், ஓந்தாச்சிமடம், குருமன்வெளி போன்ற கிராமங்கள் வெள்ள நீர் வழிந்தோடுவதில் சிரமமம் காணப்படுவதாக கிராம சேவையாளர் மற்றும் அனர்த்த அதிகாரிகள் முறையிட்டதன் அடிப்படையில் உரிய கிராமங்களுக்கு சென்று அதிகளவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றும் செயற்பாடு சபையின் செயலாளர் சா.அறிவழகன் தலைமையில் சபையின் JCB வாகனம் மூலம் இடம்பெற்று வருகின்றது.

குறித்த பகுதிகளில் கிராம சேவையாளர்கள் பிரசன்னமாகி இருந்து வழிப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.