காட்டாறு வெள்ளத்தால் மன்னம்பிட்டி பால போக்குவரத்துக்கு  அனுமதி மறுப்பு.

( வி.ரி. சகாதேவராஜா)  கடந்த சில தினங்களாக பொழிந்து வரும் கனமழையைடுத்து மன்னம்பிட்டி பகுதியில் காட்டாறு வெள்ளம் கரைபரண்டோடுகிறது.
இதனால் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
 கொழும்பு கபறணை  மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள மன்னம்பிட்டி பாலமருகேயுள் நீண்ட தாம்போதிக்கு மேலால் வெள்ளம் பல அடி செல்கின்றது .
இதனால் இரவு வேளையில் எந்த ஒரு வாகனத்தையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
பொலிஸார் பகலில் பாரிய வாகனங்களை மட்டும் கண்காணிப்போடு அனுமதித்து வருகிறார்கள் .
சிறிய வாகனங்கள் முற்றாக அனுமதிக்கப்படவில்லை.
இதனால் மட்டக்களப்பு வரும் வாகனங்கள் மீண்டும் கபறனை சென்று திருமலை வாகரை வீதியாக பயணித்து வருகிறார்கள்.
 இரவு ஊராக வாகனங்கள் தரித்து நிற்க வேண்டியநிலை ஏற்பட்டு இருக்கின்றது.
 ஒரு சில நாட்களில் நிலைமை வளமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.