மட்டக்களப்பு நகரில் போதைபொருளை தேடி அதிகாலையில் இருந்து    சோதனை நடவடிக்கை கஞ்சாவுடன் ஒருவர் கைது.

(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு தலைமையக பொலிசார்  போதை பொருள் வியபாரிகள் கடத்தல் காரர்களை தேடி மேப்ப நாய் சகிதம் கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி தொடக்கம் பொலிசாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து விசேட வீதி சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்த நிலையில் கொழும்பில் இருந்து பஸ்வண்டியில் பிரயாணித்த ஒருவரை கஞ்;சாவுடன் கைது செய்துதனர்.

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரி மான, ஆலோசனையில் பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.ஏ.கே பண்டார வழிகாட்டலில் மட்டு தலமையக பொலிஸ நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தலைமையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று அதிகாலை 2 மணிக்கு கொழும்பு வீதி ஊறணி சந்தியில் வெளிமாவட்டங்களில் இருந்து மட்டக்களப்பிற்குள் நுழையும் வாகனங்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் வீதியில் நிறுத்தி மேப்பநாய் சகிதம் கொட்டும் மழையின் மத்தியில் விடிய விடிய சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்

மட்டு பிரதான ரயில் நிலையத்தினை சுற்றிவளைத்து கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு அதிகாலையில் வந்தடையும் ரயிலில் பிரயாணம் செய்த பயணிகளை  மேப்ப நாய் சகதிம் பலத்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனா.

இதேவேளை இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது கொழும்பில் இருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த பண்வண்டியில் பிரயாணித்த ஒருவரை 10 மில்லி கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர்.