(வி.ரி சகாதேவராஜா) இரத்தினபுரி நகரத்திற்கு சென்ற இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜிக்கு நகரில் தமிழின்னியம் முழங்க மரியாதையுடன் பெருவரவேற்பு அளிக்கப்பட்டது.
இரத்தினபுரி மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ ரத்தினபுரீஸ்வரர் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்து ஸ்வயம் சேவக குழுவினரின் 130 பெண்களுக்கான முகாமில் கலந்து கொண்டார்.
அங்கு, யுவதிகளை சமுதாயத்தின் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது என்ற பொருளில் உரையாற்றினார். மேலும் அங்குள்ள மக்களின் பொருளாதார கல்வி மேம்பாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றார்.