(அஸ்ஹர் இப்றாஹிம்) கல்வியமைச்சினால் தரம் 3 அதிபர் சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிபர்கள் தங்கள் ஒருமாதகால சேவை முன் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் தலைமையில் அம்பாறை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான தெஹியத்தக்கண்டிய கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைகளை தரிசிப்பதற்காக ஒரு நாள் களப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
புதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள் பாடசாலைகளில் அதிபர்களாக,பிரதி அதிபர்களாக மற்றும் உதவி அதிபர்களாக இடமமர்வதற்கு முன்னர் மாதிரி பாடசாலைகள் தொடர்பான கள விஜயமொன்றை மேற்கொண்டு அதனூடாக குறித்த பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிற புதிய விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.