(ரக்ஸனா)
வரவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலிலே வடகிழக்கிலே மக்கள் நன்கு அறிந்த ஒரு தமிழரை நிறுத்தி அனைத்து தமிழரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும். இது வெற்றி பெறவைக்க வேண்டும் என்பதற்கு அல்ல. இந்த நிலை ஏற்பட்டால் தெற்கிலே எந்தவொரு வேட்பாளராலும் 50 வீதத்தை எட்டமுடியாது. ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகும். அப்போது தமிழர்களின் இரண்டாவது வாக்கு தேவைப்படும். அப்போது சர்வதேசத்தின் உதவியுடன் நாம் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளலாம்.என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.
சித்த வைத்தியர் கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம் அவர்கள் எழுதிய “வீட்டு வைத்தியம்” ,“வாஸ்து சாஸ்த்திரம்” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(24.12.2023) மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள ஆயுள்வேத வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் நன்றாக கடமையாற்றுகின்றார்கள் மாறாக போதனா வைத்தியசாலைகளிலும் வளப்பற்றாக்குறைகள் நிலவுகின்றன. இன்னும் சில வைத்தியசாலைகள் கவனிப்பாரற்றுக்கிடக்கின்றன. அரசியல் வாதிகளால் மாத்திரமின்றி, அமைச்சில் இருக்கின்ற ஒருசில அதிகாரிகளாலும், பாகுபாடு காட்டப்படுகின்றன. ஒதுக்கீடுகள் இருந்தாலும் அவை எமது பிரதேங்களுக்கு வருவது மிக மிக குறைவு. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிக்சை இயந்திரம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு நீண்டகாலமாகவிருந்து நாம் போராடிக் கொண்டு வருகின்றோம். கடந்த ஒருசில வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்புக்கு வருகைதரவிருந்த இந்த இயந்திரம் களுத்துறைக்கு அதுப்பப்பட்டுள்ளது. மீண்டும் ஓர் இயந்திரம் வரவுள்ளதாக அறிந்தோம் ஆனால் அதுவும் பதுளைக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்த காலமிருந்து நாங்கள் தொடற்சியதக ஒதுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம்.
மைலத்தமடு மாதவனை மேச்சல்தரைப் பிரச்சனை 100 நாட்களைக் கடந்து இன்னும் தீர்க்கப்படவில்லைஇ 2000 நாட்களைக் கடந்து காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டங்கள் இன்னும் தொடர்கின்றன.
ஆரம்பத்திலே எமது தலவர்கள் சமஸ்றி கேட்டு போராடினார்கள். பின்னர் ஆயுதப்போராட்டம்இ பின்னர் 2009 இல் அப்போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சமஸ்றியை நோக்கி தமிழ் தலைவர்கள் போராடிக் கொண்டு வருகின்றார்கள். இது கிடைக்காவிட்டால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாது. எமது அடுத்த தலைமுறை தொடற்சியாக அடக்குமுறைக்குள் வாழமாட்டார்கள். ஏனெனில் இந்த நாட்டில் மூத்த குடிகள் நாங்கள்.
எதிர்வரும் ஆண்டு ஓர் தேர்தல் ஆண்டாக இருக்கப் போகின்றது. அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நிறுத்தியதுபோல் ஜனாதிபதி தேர்தலை நிறுத்த முடியாது. இதற்கு மொட்டுக் கட்சியினர் தடைபோட்டால் பொதுத் தேர்தல் நடைபெறலாம்.
எங்களுடைய விருப்பம் ஜனாதிபதித் தேர்தலாகும். தமிழர் ஒருவர் இந்த நாட்டிலே ஜனாதிபதியாக வரமுடியாது. அதுவும் இந்த நாட்டிலே எழுதப்படாத சட்டம். பௌத்த மதத்தைத் தழுவாத ஒருவர் நாட்டிலே ஜனாதிபதியாக வரமுடியாது. கடந்த காலத்தில் பண்டாரநாயக்க கிறிஸ்த்தவ மதத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறித்தான் அரச தலைவராக வந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் ஒன்றாக இருக்க வேண்டும். அது இந்த அரசியல் சூழ்நிலையில் எம்மை மாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. முரண்பட்ட கட்சிகள் அனைத்தும் 2001 இல் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி 2009 வரைக்கும் தமிழர்கள் மிகவும் ஒற்றுமையாக சர்வதேசத்திற்குக் காட்டினார்கள். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் 22 உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி நாட்டுக்கு மாத்திரமின்றி சர்வதேசத்திற்கு ஒற்றுமையை எடுத்துக் காட்டினார்கள். அந்த நிலைமை மீண்டும் உருவாக வேண்டும்.
வரவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலிலே வடகிழக்கிலே மக்கள் நன்கு அறிந்த ஒரு தமிழரை நிறுத்தி அனைத்து தமிழரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும். இது வெற்றி பெறவைக்க வேண்டும் என்பதற்கு அல்ல. இந்த நிலை ஏற்பட்டால் தெற்கிலே எந்தவொரு வேட்பாளராலும் 50 வீதத்தை எட்டமுடியாது. ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகும். அப்போது தமிழர்களின் இரண்டாவது வாக்கு தேவைப்படும். அப்போது சர்வதேசத்தின் உதவியுடன் நாம் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளலாம். அப்போதுதான் தமிழர்களின் ஒற்றுமை நிலைநாட்டப்பட்டிருப்பது சர்வதேசத்திற்குத் தெரியவரும். இதுதொடர்பில் தமிழ் கட்சிகள் பேசிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பில் இன்னும் நிரந்தர உடன்பாடு வரவில்லை. அப்போதுதான் எமக்கான நிரந்தர அரசியல் தீர்வுகிடைத்து மக்களின் தேவைகளும் நிவர்த்தி செய்யப்படும்.
2009 இல் கொத்துக் கொத்தாக கொன்றழித்தார்கள்இ தற்போது மௌனயுத்தத்தின் மூலம் காணி அபகரிப்பு பௌத்தமயமாக்கலும் எமது குடிப்பரம்பலை குறைப்பதற்காக வேலைகளை முன்னெடுத்துள்ளார்கள். அரசு அரசாங்கம் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் எங்களுடன் நன்றாகப் பேசுகின்றார்கள். பேசிவிட்டு பின்கதவால் அதிகாரிகள் மத்தியில் நீங்கள் செய்வதைச் செய்யுங்கள் என தெரிவிக்கின்றார்கள். இந்த நிலைமை மாறவேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.