மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 42 கைதிகள்  விடுவிப்பு. 

(ரக்ஸனா)

இயேசு பாலகனின் பிறப்பை முன்னிட்டு   ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பெயரில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்துதிங்கட்கிழமை(25.12.2023)  பொது மன்னிப்பின் கீழ் 42 கைதிகள் விடுவிப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் எஸ்.பிரபாகரன் தலைமையில்   இடம்பெற்ற நிகழ்விற்கு மட்டு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா    கலந்துகொண்டு  கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை  வழங்கப்பட்டது.

இதில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர். மட்டக்களப்பு சிறைச்சாலை  வரலாற்றில் முதல் தடவையாக ஆயர் இதில் கலந்து கொண்டதுடன் அதிகப்படியான கைதிகள் விடுதலை செய்யப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.