மன்னாரில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா இரவு திருப்பலிகளில் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

(வாஸ் கூஞ்ஞ)
உலகம் பூராகவும் கத்தோலிக்க மக்கள் திங்கள் கிழமை (25) கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடிய அதேவேளையில் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடினர்.

அதிகமான பங்குகளில் இவ்விழாவை முன்னிட்டு இரவு 11.45 மணிக்கு இப்பெருவிழா திருப்பலிகள் இடம்பெற்றன.

கடந்த சில தினங்களாக மன்னாரில் மழை பெய்து வந்தபோதும் இன்றையத் தினம் காலநிலை சுமூகமாகக் காணப்பட்டதால இரவுத் திருப்பலிக்கு பெருந் தொகையான பக்தர்கள் கலந்து கொண்டதாக மறைமாவட்ட செய்திகள் தெரிவித்தன.

மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த பங்காகவும் கத்தோலிக்கர் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றாகவும் பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் இரவு பெருவிழா திருப்பலி பங்குத் தந்தை அருட்பணி எஸ்.அன்ரன் தலைமையில் உதவிப் பங்குத் தந்தை அருட்பணி அல்பன்ராஜ் அடிகளார் இணைந்து கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.

திருப்பலி முடிவுற்றதும் பங்கு மக்கள் அதிகமானோர் கலந்து கொண்ட நிலையில் பங்குத் தந்தை கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு கேக் வெட்டி சிறப்பிக்கப்பட்டதுடன் கரோல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.