நத்தார் கொண்டாட பணம் இன்றி யேசுநாதரின் பிறந்த தினம் தனது இறப்பு தினம்

Kallady Bridge, Batticaloa (inside view)

என தற்கொலை செய்ய மட்டு வாவியில் குதித்த 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர்

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் தொழில் இல்லாத காரணத்தால் நத்தாருக்கு பிள்ளைகள் மனைவிக்கு ஆடைவாங்கி கொடுக்க முடியாது மனமுடைந்த 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் யேசுநாதரின் பிறந்த தினம்  எனது  இறப்பு தினமாக அமைய வேண்டும் என  தற்கொலை செய்வதற்காக கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்த நிலையில் காப்பாற்றப்பட்ட பரபரப்பு  சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு 11 மணிக்கு இடம்பெற்றள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்வதரான 42 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை மேசன் தொழில் செய்துவந்துள்ள நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டிடத் தொழில் இல்லாத காரணத்தால் பொருளாதார ரீதியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளாh.;

இந்த நிலையில் வருடத்தில் ஒருதடவை வரும் நத்தார் தினத்தை கொண்டாடுவதற்கு பிள்ளைகளுக்கு ஆடை வாங்கி கொடுக்க முடியாது நிலை மற்றும் மனைவியாரின் நச்சரிப்பு போன்ற மனக்கவலையடைந்துள்ளார்

இதனையடுத்து சம்பவதினமான நேற்று இரவு வீட்டைவிட்டு வெளியேறி யேசுநாதரின் பிறந்த தினம்  எனது  இறப்பு தினமான அமைய வேண்டும் என தற்கொலைக்கு பெயர் போன இடமான கல்லடி பாலத்தில் இருந்து தற்கொலை செய்ய வாவியில் குதித்த நிலையில் வாவியில் இருந்த குதித்து நீரில் தத்தளித்த நிலையில் பயம் ஏற்பட்டதையடுத்து  பாலத்தின் தூனை பிடித்துக் கொண்டு காப்பாற்றுமாறு கத்திய போது அங்கு தோணியில் மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் அவரை காப்பாற்றி கரை சேர்த்து பொலிசாருக்கு அறிவித்ததாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

குறித்த நபரை பொலிசார் கைது செய்து  தற்கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை இவரின் இந்த நடவடிக்கை பரபரப்பு அல்ல நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் எதிர்காலத்தில் நாட்டு மக்கள் வாழமுடியாது இவ்வாறு தற்கொலைக்கு செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை இவரின் செயல் மூலம் அனைவருக்கும் உணர்த்துகின்றமை குறிப்பிடத்தக்கது.