தாந்தாமலையில் கசிப்பு சந்தேக நபர்கள் கைது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இன்றைய நாள் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 80,000mm கோடாவும், 1500mm வடிசாராயமும், கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாந்தாமலை பிரிவின் கிராம உத்தியோகத்தர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளது.