கல்முனை வலய பாடசாலைகளுக்கு ஜோசப் ஸ்டாலின் விஜயம்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)  கல்முனை கல்வி வலய ஆசிரியர் சங்க செயலாளரின் கோரிக்கையை ஏற்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்கள்  கல்முனை வலய பாடசாலைகளுக்கான தரிசிப்பை மேற்கொண்டு அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மற்றும் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு  சமூகமளித்திருந்தார்.
இதன் போது அதிபர் ,ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிபர் ஆசிரியர்களால் ஜோசப் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டு உரிய தரப்பினருடன் பேசி தீர்வை பெற்றுக் கொடுக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.