(அஸ்ஹர் இப்றாஹிம்) பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியில் ஆங்கில மொழி திருவிழா பாடசாலை கலையரங்கில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ரீ.பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் ஆர்.ஜீவனானந்தராஜா பிரதம அதிதியாகவும், ஆங்கில பாடத்திற்கான உதவி கல்வி பணிப்பாளர் எஸ்.சந்திரகாசன் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் ஆங்கில மொழி மூலமான கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்களும் வழங்கப்பட்டன.