இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் நேற்று மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் கல்லூரியில்

(கனகராசா சரவணன்)
நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில்  பொலிஸ்  சேவையில் கடமையாற்றுவதற்காக இலங்கை பொலிஸ்  ஆள்சேர்ப்பு  திணைக்களத்தின் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு  ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் பொலிஸ்  சேவைக்கு  வடக்கு கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் இருந்து தமிழ் மொழி மூலமான பொலிஸ் சேவைக்கு விண்ணப்பிக்கப்பட்ட   122 பொலிஸ்  உத்தியோகத்தர்களுக்கான  ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள்  நேற்று திங்கடகிழமை (18) மட்டக்களப்பு கல்லடி பொலிஸ்  கல்லூரியில் நடைபெற்றது .

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ்  கல்லூரி பொறுப்பதிகாரி    எஸ்.ரி. சிவநாதன்  ஒழுங்கமைப்பில்  பொலிஸ்  கல்லூரி உதவி பணிப்பாளர் பொலிஸ்  அத்தியட்சகர்  ருவான் குமாரசிங்க தலைமையில்  மட்டக்களப்பு கல்லடி பொலிஸ்  கல்லூரி  பொலிஸ்  உத்தியோகத்தர்களினால்  ஆள்சேர்ப்பு பதிவு  நடவடிக்கைகள்  இன்று  முன்னெடுக்கபட்டன

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ்  கல்லூரியில்  இடம்பெற்ற ஆள்சேர்ப்பு நடவடிக்கையின் பின்  பொலிஸ்  திணைக்களத்திற்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கான பயிற்சிகள்  மட்டக்களப்பு கல்லடி  பொலிஸ்  கல்லூரியில் நேற்று ஆரம்பிக்கபபட்டமை குறிப்பிடத்தக்கது