(அஸ்ஹர் இப்றாஹிம்) 15 வயதுடைய பாடசாலை மாணவியும், அவரது தாயாரும் கண்டி பொலிஸ் நிலையத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இரு பாடசாலை மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கண்டி பொலிஸாரினால் கடந்த திங்கட் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபரில் ஒருவர் தனக்கு மயக்க மருந்து கலந்த குடிபானத்தை வழங்கிய பின்னர் சுயநினைவு இழந்த நிலையில் பலாத்காரம் புரிந்ததுள்ளதுடன், நிர்வாணமாக்கி பதிவிட்ட வீடியோக்களை தனது நண்பர்களுக்கும் பகிர்ந்து என்னையும் பயமுறுத்தி தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பலதடவைகள் பலாத்காரம் புரிந்ததாகவும் இதற்கு முன்னாள் காதலன் உடந்தையாக இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவி விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.