ஓட்டமாவடியில் பிரதேச இலக்கிய விழா.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசாரப் பிரிவு ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா திங்கட்கிழமை (18) ஓட்டமாவடி பழைய பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஓட்டமாவடி உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில், அதிதிகளாக ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளரும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், கலைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கலை, கலாசார நிகழ்ச்சிகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசாரப் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு நினைவுச்சின்னங்கள், சான்றிதழ்கள், வழங்கி வைக்கப்பட்டன.