கடத்தி வரப்பட்ட  தடை செய்யப்பட்ட மாத்திரைகளுடன் இரு சந்தேக இளைஞர்கள் கைது.

(வாஸ் கூஞ்ஞ) கடத்தல் மூலம் தடைசெய்யப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் இரு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிலாவத்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது
கடந்த வெள்ளிக்கிழமை (15) மன்னார் வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் இலங்கை கடற்படை தேரபுத்த கல்லாறு வீதித் தடைக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 120 தடைசெய்ய்பட்ட மாத்திரைகள் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இச்சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் நானாட்டானில் உள்ள அச்சங்குளம்  வீடொன்றில் இருந்து மேலும் 2700 மருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் மேலும் 01 சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் 22 மற்றும் 23 வயதுடைய சிலாவத்துறை மற்றும் நானாட்டான் பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள்  மருந்துகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.