கலாபூஷணம்’ விருது பெற்ற சதாசிவம் சரவணபவன் மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தினால் கௌரவிப்பு

(சுமன்)
அண்மையில் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால் ‘கலாபூஷணம்’ விருது வழங்கப்பட்ட முன்னாள் மக்கள் வங்கி பிரதிப் பிராந்திய முகாமையாளர் சதாசிவம் சரவணபவன் அவர்களைப் பாராட்டும் முகமாக மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் தலைவர் ரோட்டரியன் தேசபந்து எம்.செல்வராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தலைவரால் வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டு , உறுப்பினர்களால் பொன்னாடைகள் போர்த்தி மலர் மாலை அணிவிக்கப்பட்டு கலாபூசனம் ரோட்டரியன் ச.சரவணபவன் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்.

கலாபூஷணம் ச.சரவணபவன் அவர்கள் எழுதிய ‘தீட்டு வீடு’ என்னும் நாடக நூல் சாகித்தியமண்டல விருது பெற்றிருந்ததுடன், இவர் 45 வருடங்களாக நாட்டாரியல் நடகம், கவிதை, நூலாக்கம் போன்றவற்றல் தன்னை அர்ப்பணித்தவர். மேலும் இவர் பாடகராகவும், பல்குரல் வல்லுனராகவும், மேடை நிகழ்வு அறிவிப்பாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் பல பரிமானங்களைக் கொண்டவர். அண்மைக்காலத்தில் இவர் ‘தமிழரியல்’ என்னும் யூடியுப் அலைவரிசையினை ஆரம்பித்து எமது கலாச்சார பண்பாட்டு விழுமியங்களையும், சுகாதாரம் சார்ந்த பேட்டிகளையும் ஒளிப்பதிவு செய்து தரவேற்றம் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.