( வி.ரி. சகாதேவராஜா) அம்பாரை மாவட்டம் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் எற்பாட்டில் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கலை அரங்கில் கடந்த மூன்று தினங்களாக சிறப்பாக நடைபெற்றது.திருவாசக மாநாட்டின் 03 ஆம் நாள் நிகழ்வுகள் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கண்ணகி கலையரங்கில் நேற்று (17.12.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணியளவில் ஆரம்பமாகி தவத்திரு சிவாக்கர தேசிய சுவாமியின் அருளுரை, மாநாட்டின் திருவாசக நூல் வெளியீடு என்பவற்றுடன் இவ் ஆண்டுக்கான திருவாசக மாநாடு இனிதே நிறைவடைந்தது.
சமய சமூக ஆன்மிக இறை ஆசி கிடைக்க வேண்டும் என்னும் நோக்குடன் இந்தியாவில் இருந்து சூரியநார் கோவில் ஆதின தவத்திரு சிவாக்கர தேசிய சுவாமிகள் வருகை தந்திருந்தார்.
அவரது வருகையை ஒட்டி இந்து ஸ்வயம் சேவக சங்கமும் ஆலயங்களும் மற்றும் இந்து சமய அமைப்புக்களும் இணைந்து திருவாசக மாநாட்டை அம்பாறை மாவட்ட தம்பிலுவிலில் நடாத்தின.
இறுதி நாள் (17) நிகழ்வில் இராமகிருஷ்ண மிஷன் இலங்கை தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்தியா சூரியநார் கோவில் ஆதின தவத்திரு சிவாக்கர தேசிய சுவாமிகள் மற்றும் இகிமி சுவாமிகள் திருவாசகம் தொடர்பான சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள்.
1ம் நாள் நிகழ்வு 2023.12.15 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிமுதல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு திருவாசகம் ஓதுதலும் பொருள் கூறலும்” என்ற தலைப்பில் இடம்பெற்றது.கலாபூஷணம் திரு. தம்பிமுத்து மகேந்திரா அவர்களின் தலைமையில் திருவாசக மாநாடு ஆரம்பமாகி இடம் பெற்றது.