விதவைகள் மற்றும் வீட்டை வலுப்படுத்தும் வேலைத்திட்டம்.

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இலங்கை பெண்கள் பணியகத்தின் அனுசரணையுடன் கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்சா அவர்களின்   ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன், அலுவலகத்தின் மகளிர் பிரிவு, விதவைகள் மற்றும் வீட்டை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்- கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீட்டுத் தொழில் முயற்சியாளர்கள்  விதவைகள் மற்றும் வீட்டுத் தலைமை தாங்கும் பெண்கள் என பெண்கள் 10 பேருக்கு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் கந்தளாய் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டது.
படம்:-எப்.முபாரக்