(ஏறாவூர் நிருபர் நாஸர்) மட்டக்களப்பு- ஏறாவூர் அல் ஹஸனிய்யதுல் காதிரிய்யா அறபுக்கல்லூரியின் ஐம்பெரும் விழா (18) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் ஹஸனிய்யா கல்லூரி அதிபர் மௌலவி அப்துல் ஹலீம் மனாப் (மன்பயீ) தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் 4 ஆவது அல்- ஆலிம் பட்டமளிப்பு, 5 ஆவது தலைப்பாகை சூட்டுதல், 3 ஆவது மலர் வெளியீடு, மீலாது மற்றும் நினைவுப்பேருரை ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
பிரதம அதிதியாக அஸ்ஸெய்யித் ஷரீப் அலி மௌலானா கலந்துகொண்டார்.
விசேட அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்எஸ். சுபைர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாணவர்களது பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. அத்துடன் திறமையான மாணவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
கொழும்பு அஜ்வாதுல் பாஸி அறபுக்கல்லூரி அதிபர் மௌலவி அஹ்மத் சூபி மஹ்ழரி விசேட பேச்சாளராகக் கலந்துகொண்டார்.ஏறாவூர் அல் ஹஸனிய்யதுல் காதிரிய்யா அறபுக்கல்லூரி கடந்த பன்னிரண்டு வருடகாலமாக அப்துல் மஜீது மாவத்தையில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.