மட்டக்களப்பில் மழை வெள்ளத்தினால் 1334 குடும்பங்களைச் சேர்ந்த 4254 பேர் பாதிப்பு 10 வீடுகள் பகுதியவில் சேதம்–

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலகப்பிரிவுகளில் 1334 குடும்பங்களைச் சேர்ந்த 4254 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10 வீடுகள் பகுதியவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் நேற்று சனிக்கிழமை மாலை வெளிட்டுள்ள புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக்பிரிவில் 941 குடும்பங்களைச்சேர்ந்த 3046 பேரும், பேரதீவுபற்று வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் 40 குடும்பங்களைச்சேர்ந்த 142 பேரும், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 9320 பேரும்,

மண்முனைபற்று பிரதேச செயலகப்பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும். காத்தான்குடி பிரதேச செயலப்பிரிவிலுள்ள காத்தான்குடி 2ம் பிhரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 32 குடும்பங்களைச்சேர்ந்த 130 பேரும் பாதிப்படைந்துள்ளதுடன் வாகரை 2 வீடுகளும் காத்தான்குடியில் ஒரு வீடும், ஏறாவூர்பற்றில் 7 வீடுகளுமாக 10 வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளதாக அந்த புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது