மட்டக்களப்பு மேற்கில் பாதணி வவுச்சர்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் பாடசாலையின் அதிபர்களிடம் இன்று(15) வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டன.

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலை மாணவர்கள் இலவசமாக பாதணிகளை பெறும் வகையில் வவுச்சர் வழங்கும் திட்டம் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கமைய மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மாணவர்களுக்கான வவுச்சர்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.

மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்வி அலுவலகத்தில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், மட்டக்களப்பு மேற்கு பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான செ.மகேந்திரகுமார், ரி.யசோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த பாதணிகளுக்கான வவுச்சர்களை, பதிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களில் கொடுத்து மாணவர்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்போது, வவுச்சர்களை மாணவர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான விளக்கங்களும் அதிபர்களுக்கு அளிக்கப்பட்டன.