வீட்டின் மீது மரம் விழுந்து வீடு சேதம். உள்ளிருந்தவர்கள் தெய்வாதினமாக தப்பித்தனர்.

( வாஸ் கூஞ்ஞ)  மன்னாரில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக வீடு ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் அதில் இருந்த குடும்பத்தினர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

இச் சம்பவம் மன்னார் நானாட்டான் பகுதியில் வியாழக்கிழமை (14) இரவு இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் கடந்த ஓரிரு தினங்களாக சீரற்ற காலநிலை காணப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (14) நானாட்டான் பகுதியில் ஒரு வீட்டில் இரவு இவ்வீட்டு குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்தபொழுது அவர்களின் வீட்டின் அருகாமையில் இருந்த மரம் ஒன்று காற்றின் வேகத்தாலும் மழையின் தாக்கத்தாலும் வீட்டின்மேல் விழுந்தமையால் வீடு பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.
இருந்தும் அவ்வீட்டுக்குள் இருந்தவர்களால் தெய்வாதீனமாக தப்பித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.