அலிசாஹிர் மௌலானாவுடன் ஐ.நா. சபையின் வதிவிட பிரதிநிதி சந்திப்பு.

(ஏ.எஸ்.மெளலானா)  கிழக்கு மாகாணத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே பிரன்சி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் திருகோணமலை நகரில் இடம்பெற்றது.

இதன்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சமகால நிலைவரங்கள், அபிவிருத்தி திட்டங்கள், மக்களின் தேவைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மெளலானா எடுத்துக் கூறினார்.