மட்டக்களப்பு வாவியில் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு கல்லடி வாவிக்கரையில் முதியவர் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகரிலுள்ள வாவியில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையிலேயே சடலம் சிக்கியுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும், சடலம் அடையாளம் காணப்படவில்லை.