திருகோணமலை,வெருகல் பிரதேச செயலகத்தில் இலக்கிய விழா.

(ஹஸ்பர்)   திருகோணமலை_வெருகல் பிரதேச செயலகத்தில் இலக்கிய விழாவானது  வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ்  தலைமையில் நடைபெற்றது.
வெருகல் பிரதேசத்தை பிரதிபலிக்கும் வகையில் கும்மி, கோலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், கிராமிய நடனம் மற்றும் பாடல் என பல நிகழ்வுகள் இடம்பெற்றன. மேலும் இந்நிகழ்வில் பிரதேச செயலக பிரிவில் கலை போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் மற்றும் பரிசு பொருட்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர், கிராம சேவகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.