சித்துவிலி சித்தம் கார்ட்டூன்” சுவரொட்டி, கலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு.

(ஹஸ்பர்) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நடாத்தப்பட்ட “சித்துவிலி சித்தம் கார்ட்டூன்” சுவரொட்டி மற்றும் கலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வானது மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இன்று (13) அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி  தலைமையில் நடைபெற்றது.
அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில் சிறுவயதிலிருந்தே இது போன்ற கலைத்துறையில் குழந்தைகளை ஈடுபடுத்துவது, கலைத்திறன்களைக் கொண்ட சிறந்த குழந்தைகளை சமூகத்திற்கு உருவாக்க ஏதுவாக அமைகின்றதெனவும் போட்டியில் கலந்து கொண்ட சிறுவர்களில் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றமை மிகவும் சிறப்பு வாய்ந்ததெனவும்  மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி  தெரிவித்தார்.
இதன் போது பல்வேறு பிரிவுகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள்   வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.  அருள்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன் , வலயக் கல்விப் பணிப்பாளர்கள், குச்சவெளி ,கிண்ணியா பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.  குருகுலசூரிய, மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் மு.மு.மு.ஸம்ஸீத் , மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.