ஆரம்பக்கல்விப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனை தொடர்பான  செயலமர்வு.

(எஸ்.சபேசன்)

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்பக்கல்விப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனை தொடர்பான  செயலமர்வு வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம். உமர் மௌலானா அவர்களது வழிகாட்டலில் வழிகாட்டல் ஆலோசனைக்குப்பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் ஏ.எச்.எம்.சபாஹீர் தலைமையில் சம்மாந்துறை ஆசிரிய வள மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் வழிகாட்டல் ஆலோசனையினை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இவ் செயலமர்வில் சம்மாந்துறை வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.நைறோஸ்கான் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.எஸ்.சிறாஜீதீன் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.எச் எம்.அன்வர் ஆகியோர் வளவாளராகச் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது

WhatsApp Image 2023-12-13 at 20.14.39_e02696dc.jpgWhatsApp Image 2023-12-13 at 20.14.52_6a2fd8f9.jpg