மட்டு மேச்சல் தரை பகுதியில் கால்நடைகளை கொல்லுபவர்களை தேடி பொலிஸ் விசேட தேடுதல் நடவடிக்கை.

((கனகராசா சரவணன்))

மட்டு மேச்சல் தரை மயலத்தமடு மாதவனை பிரதேசத்தில் கால்நடைகள் தொடர்ந்து திருடிவருவபர்கள் கொலை செய்பவர்களை தேடி மேச்சல் தரை பகுதியை 50 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர்; சுற்றிவளைத்து தேடும் விசேட நடவடிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை(13)  முன்னெடுத்தனர்.

குறித்த மேச்சல் தரை பகுதியில் சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மக்கள் சேனைபயிர் செய்கையில் ஈடுபட்டுவருகின்றனர் இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகளை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோரி கால்நடை வளர்ப்பு பண்ணையாளர் சங்கம் தொடர்ந்து 90 நாட்களாக கவனயீர்பு;பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு எதிராக மகாவலி அதிகாரசபை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து அவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டது.

இதேவேளை மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் கால்நடை பண்ணையாளர்களின் கோhக்கைக்கு இனங்க மயிலத்தமடு பகுதியில் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு கடந்த 8ம் ஒக்டோபர் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இவ்வறான நிலையில் அந்தபகுதியில் கால்நடைகள் திட்டமிட்டு துப்பாக்கியால் சுட்டும் மின்சார வேலிகள், மற்றும் வாய்வெடி, வாளால் வெட்டியும் சுமார் 100 க்கு மேற்பட்ட கால்நடைகளை சட்டவிரோமாக குடியேறி சேனை பயிர் செய்கின்ற சிங்களவர்களால் அண்மைகாலமாக தினமும் ஒன்று என்ற வீதத்தில் கால்நடைகள்  கொல்லப்பட்டுவருவதாக பண்ணையாளர்களால் குற்றச்சாட்டு தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த இருவாரங்களுக்கு முன்னர் அந்தபகுதியில் சட்டவிரோத உள்ளூர் துப்பாக்கியுடன் இருவரை வாழைச்சேனை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்ததி தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

இந்த நிலையில் கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன வின் அறிவுறுத்தலின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வழிகாட்டலில் கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மாவட்ட குற்ற விசாணைப்பிரிவினர் உட்பட 50 மேற்பட்ட பொலிஸ் விசேட குழுவினர் 5 பிரிவுகளாக பிரிந்து சம்பவதினமான நேற்று காலை 6 மணியில் இருந்து மேச்சல்தரை பகுதிக்குள் நுழைந்து மாலை 6 மணிவரை விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது உயிரிழந்த நிலையில் 3 கால்நடைகள் எந்தவிதமாக காயங்களும் இல்லாமல் உயிரிழந்த நிலையல் இருந்துள்ளதாகவும் அந்த பகுதியில் அனுமதி பெற்று சேனைபயிர் செய்கையில் ஈடுபட்டுவரும் 3 பேரை விசாரணைக்காhக அழைத்து வந்து விசாரணையின் பின்னர் விடுவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.