மட்டக்களப்பில் சிறு குற்றவாளிகளை சீர்திருத்தி அவர்களின் தொழில் வாய்ப்புக் கான விற்பனை நிலையம்

(கனகராசா சரவணன்)

சமுதாயத்தில் சிறு குற்வாளிகளை சீர்திருத்தி அவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கத்தின்  கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த காரியாலயம் மட்டு மாநகரசபையின் அனுசரனையுடன்  நீதிமன்றத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட விற்பனை நிலையத்தை நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் இன்று புதன்கிழமை (13) சம்பிராய பூர்வமாக திறந்துவைத்தார்.

மட்டக்கப்பு பிராந்திய சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் முகம்மட் ஸப்றீன்; தலைமையில்  இடம்பெற்ற இந்த நிகழ்வில் நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் மற்றும்  சமுதாய சீர்திருத்த வேலைப்பரிசோதகர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மாநகர ஆணையாளர் நீதவான் நீதிமன்ற பதிவாளர் மட்டக்களப்பு சிறுவர் நன்நடத்தை நிலையப்பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் நீதிமன்றத்துக்கு அருகாமையில் வீதி ஓரத்தில்  நிர்மானிக்கப்பட்ட கட்டிடத்தை நீதவான் பீற்றர் போல் நாடாவெட்டி திறந்துவைத்ததையடுத்து அங்கு விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது .

சமுதாயத்தில் சிறு குற்வாளிகளை சீர்திருத்தி அவர்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்ட இந்த விற்பனை நிலையத்தினை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் மூலம் குற்றச்செயல்களில் இருந்து விடுபட்ட சிறந்த சமூகமொன்று உருவாகும் என்பதாகும் என்பதுடன் குற்றவாளிகளை சீர்திருத்தும் பல்வேறுவகையான நடவடிக்கைகளையும் மட்டக்களப்பு பிராந்தியத்தில் முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது.