சம்மாந்துறை அல் முனீர் பாடசாலை வீதியில் வீதி சமிஞ்சை குறியீடு திறப்பு.

 (சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் )  சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட அல் முனீர் வித்தியாலயத்தில் “வீதி சமிஞ்சை ” குறியீடு ஒன்றை பாடசாலை வீதியில் திறக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.அப்துல் ஜப்பார் தலைமையில் இன்று (13) இடம் பெற்றது.
இவ் வீதி சமிஞ்சை குறியீடானது திங்கள் தொடக்கம் வெள்ளி வரை காலை 7.00-7.30 ஆன நேரங்களிலும், திங்கள் தொடக்கம் வியாழன் பாடசாலை முடிவுறும் 2.00-2.30 வரையான நேரங்களிலும் வெள்ளிக்கிழமை பாடசாலை முடிவுறும் நேரமான 11.30-11.45 வரையான நேரங்களிலும் வாகனங்கள் அவ் வீதியால் பயணிக்க முடியாது என குறியீடு குறிக்கின்றது.
இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெறுங் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.சதீஸ்கர்…
இவ்வாறான நேரங்களில் வேகமாக வீதி போக்குவரத்து விதிகளை மீறி பயணம் செய்வோர் ,பாடசாலை மாணவிகளுக்கு இடயூறாக வீதியில் பயணம் செய்வோரை கட்டுப்படுத்தும் முறையில் வீதி தடைகளை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்ததோடு மேலும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் அவர்களுடன் பேசி இவ்வாறான நேரப்பகுதியில் வீதி போக்குவரத்து பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக மேலும் தெரிவித்தார்.
 இன் நிகழ்வுக்கு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெறுங் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.சதீஸ்கர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பெறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஏ.டி.ஆர் விஜயவர்த்தன,பாடசாலையின் நிறைவேற்றுக்கு குழு செயலாளர் வி.எம் முஹம்மட்,வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தகர் ஐ.எல் நிப்றால் அலி என பலர் கலந்து கொண்டனர்.