சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் சமஷ்டி தொடர்பான தோற்றமும், பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை வெளிக்காட்டும் வகையிலான விழிப்புணர்வு கண்காட்சியும் நாளையதினம் வியாழக்கிழமை (14.12.2023) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை மட்டக்களப்பு மியானி நகர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் கிழக்குமாகாண அங்கத்துவ அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் குறித்த நிகழ்வானது வடக்கு கிழக்கில் பல்லாண்டு காலமாக இலங்கை அரசின் அடக்கு முறைக்கும், ஒடுக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ்பேசும் மக்கள் அன்றில் இருந்து இன்று வரைக்கும் பல வகையான உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்ற பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை வெளிக்காட்டும் வகையிலான விழிப்புணர்வுக் கண்காட்சியோடு, சமஷ்டியின் தோற்றம் தொடர்பான நிகழ்வாகவும் இடம்பெறவுள்ளதாகவும் இந்நிகழ்வில் அனைவரையும் பங்கேற்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கண்டுமணி லவகுசராசா கோரிக்கை விடுத்துள்ளார்.