இரு தசாப்தங்களின் பின் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் மாணவர்கள் 22 பேர் புலமைக்குத் தகுதி.(Photo)

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)  இம்முறை (2023) இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது கமு/ கமு/ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (GMMS) இருந்து சுமார் 22 வருடங்களின் பின்னர்  22  மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று புலமைப்பரிசில் பெறுவதற்குத் தகுதி பெற்று, பாடசாலைக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளதாக அதன் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தெரிவித்தார்.
அந்த அடிப்படையில், எம்.எச்.எம். சுதைப் – 171, எம்.ஆர்.எப். றிக்ஸா – 171, எம்.ஆர்.எம்.றாபி – 171, எம்.எம். மஹ்தி – 169, எச்.எம்.எப்.எச். தமாமா – 164, எப்.என். ஹினா – 168, எம்.ஆர்.எம். சாபிக் – 158, எம்.ஆர்.எப். அய்ஷா  – 157, ஏ.எச். ராஷித் – 156, என்.எப்.ஏ. மலீஹா – 156, எச்.எம்.எம். அல் – பதின் – 155, இஸட்.ஐ. லீனா – 153, எம்.என்.எப். அஸாஹ் – 150, எம்.ஏ.எப்.இஸட். ஹானி – 150, ஆர்.எச்.ஏ.எப். பதின் – 150, என்.எம்.கே. ஷஹீன் – 150, எம்.ஜே.எம். அக்ஸாப் – 149, எம்.ஏ.எப். இஸட். ஹப்ஸா – 148, என்.எப். சனீல் – 147, என்.ரீ. ஸீனத் – 146, எம்.எஸ்.எப். சாரா – 146, எம்.ஜே.எப். ஹனாஹ் – 145 ஆகிய 22 மாணவர்களே
வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று புலமைப் பரிசில் பெறுவதற்குத் தகுதி பெற்றவர்களாவர்.
இப்பாடசாலையில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குக் தோற்றிய 139 மாணவர்களில் 127 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று  91.36 சதவீத சித்தியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் சாதனை மாணவர்களை வாழ்த்துவதுடன் இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், பிரதி அதிபர் திருமதி கே.எம். ராபீக், உதவி அதிபர் எம்.ஏ.சீ.எல். நஜீம்,  பகுதித் தலைவர்கள், வகுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர்களுக்கு பாடசாலை சமூகத்தினர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.