(ஏ.எஸ்.மெளலானா) காலம் சென்ற முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் – மனித நேய மாமனிதர் மயோன் முஸ்தபாவின் நினைவேந்தல் நிகழ்வும் “தடயங்கள்” நூல் வெளியீடும் மனிதவள முகாமைத்துவ பேரவையின் ஏற்பாட்டில் விரைவில் சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ளன.
குறித்த நூலில் மர்ஹூம் மயோன் முஸ்தாபா மேற்கொண்ட உயரிய சமூகப் பணிகள், அபிவிருத்தித் திட்டங்கள், நாடு, சமூகம் மற்றும் பிராந்திய முன்னேற்றத்திற்கான அவரது எண்ணக்கருக்கள், தூரநோக்கு சிந்தனைகள் பதிவு செய்யப்படவுள்ளன.
அத்துடன் மயோன் முஸ்தபா தொடர்பாக உலமாக்கள், கல்விமான்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்பினர் மற்றும் அவருடன் நெருங்கிப் பழகியோர், அவர் தொடர்பில் நல்லெண்ணம் கொண்டவர்களின் மனப் பதிவுகளை இந்நூலில் தொகுத்து வெளியிடுவதற்கும் மனிதவள முகாமைத்துவ பேரவை தீர்மானித்துள்ளது.
ஆகவே, மர்ஹூம் மயோன் முஸ்தபா தொடர்பிலான தமது ஆக்கங்களும் இந்நூலில் இடம்பெற விரும்பினால் எதிர்வரும் 26.12.2023 ஆம் திகதிக்கு முன்னதாக ஒரு A4 பக்கத்திற்கு உட்பட்டதாக அமையும் வண்ணம் தமது புகைப்படத்துடன் [email protected] எனும் ஈ மெயில் முகவரிக்கோ அல்லது 0775746881 எனும் வட்சப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு மனிதவள முகாமைத்துவ பேரவை கேட்டுள்ளது.