பிணையில் வெளியேவந்த திருடன் மீண்டும் கைது.மட்டில் சம்பவம்

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் வீடுகள் உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பிணையில் வெளிவந்த வாழைச்சேனை யைச் சேர்ந்த திருடன் ஒருவரின் கைவிரல் அடையாளத்துடன் ஏற்கனவே உடைத்து திருட்டுப்போன வீடுகளில் இருந்து பெறப்பட்ட கைவிரல் அடையாளமும் ஒன்று என கண்டறிந்ததையடுத்து குறித்த திருடனை நேற்று திங்கட்கிழமை (11) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபரிடம் இருந்து பெறப்பட்ட கைவிரல் அடையாளத்தையும் ஏற்கனவே திருட்டுப்போன வீடுகளில் இருந்து பெறப்பட்ட கைவிரல் அடையாளங்களை பெற்று கைவிரல் பரிசோதனைக்கு பொலிசார் அனுப்பிய நிலையில் திருடனின் கைவிரல் அடையாளமும் திருட்டுப்போன இடங்களில் இருந்து பெறப்பட்ட கைவிரல் அடையாளமும் ஒன்றுதான் என கண்டறியப்பட்டதையடுத்து குறித்த திருடனை நேற்று வாழைச்சேனையில் வைத்து கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட திருடன் மட்டக்களப்பில் இரண்டு வீடு உடைப்பு  களுவாஞ்சிக்குடியில் இரண்டு வீடு உடைப்பு  காத்தான்குடி இரண்டு வீடு உடைப்பு,  ஏறாவூரில் 2 வீடுகள் உட்பட 8 வீடுகளை உடைத்து பெரும் திருளான தங்க ஆபரணங்கள், பணம், கணனி உட்பட்டவைகளை திருடிச் சென்றுள்ளதாகவும் திருட்டுப்போன அந்தந்த பிரதேச பொலிஸ் பிரிவினர் விசாரணையை மேற்கொண்டு வருவுதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.