வெருகல் பிரதேச மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு.

(ஹஸ்பர்)   திருகோணமலை_ வெருகல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில்   World Vision நிறுவனத்தின் அனுசரணையில்  இலங்கைத்துறை முகத்துவாரம் கிராமசேவகர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு தலா இரண்டு லட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் (11) வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ்  தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.  மீனவர்களின் மீன்பிடி துறையையும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் குறித்த மீன் பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதன்போது World Vision நிறுவனத்தின் அதிகாரிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.