பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம் – மட்டக்களப்பில் மூன்று நாள் செயலமர்வு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) அனர்த்த பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் “இனவிருத்தி சுகாதாரம்” எனும் தலைப்பில்

மட்டக்ளப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மூன்று நாள் செயலமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு மட்டக்களப்பு கிறீன் காடின் விடுதியில் அதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த மூன்று நாள் செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.எ.சீ.எம். றியாஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இயற்கை அனர்த்தங்களின்போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல் மற்றும் அதன் அனர்த்தத்திற்கு தாக்குப் பிடிக்கக்கூடிய சமுகத்தைக் கட்டியெழுப்புதல், கிராம மட்டங்களில் இயற்கை அனர்த்த தயார்படுத்தல், அனர்த்தக் குறைப்பு, அவசரகால நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் மற்றும் அனர்த்தத்தின் போதான இனவிருத்தி சுகாதாரம் போன்ற விடயங்களை மையப்படுத்தியவாறு இடம்பெறவுள்ளது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இச்செயலமர்வில் பிரதேச செயலகப் பிரிவுகளில் கடமையாற்றும் அரச  உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்கள் என பலரும் அழைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படுகின்றனர்.

குறித்த செயலமர்வின் ஆரம்ப நாள் நிகழ்விற்கு அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், எஃப்பீஏ (FPA) நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் கமகே  மற்றும் எஃப்பீஏ (FPA) நிறுவனத்தின் சிரேஸ்ட முகாமையாளர் எஸ்.எச்.இம்தியாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன், இந்நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் அனர்த்த முகாமைத்துவ சட்டம், அவசர கால நிலைமையில் எவ்வாறு செயற்படுதல், முதலுதவி, நீச்சல் பயிற்சி மற்றும் அனர்த்தங்களை தடுத்தல் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறுபட்ட சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை தேர்ந்தெடுத்து செயல்முறை பயிற்சிகளையும்  வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2023-12-11 at 19.34.00.jpegWhatsApp Image 2023-12-11 at 19.33.57.jpegWhatsApp Image 2023-12-11 at 19.33.57 (1).jpegWhatsApp Image 2023-12-11 at 19.33.59.jpegWhatsApp Image 2023-12-11 at 19.33.58.jpegWhatsApp Image 2023-12-11 at 19.33.56.jpegWhatsApp Image 2023-12-11 at 19.33.54 (1).jpegWhatsApp Image 2023-12-11 at 19.33.54.jpegWhatsApp Image 2023-12-11 at 19.33.53.jpeg