யாழில் போதை பொருள் கடத்தல்காரரன 6 பேர் ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து  கொலை அச்சுறுத்தல்.

(கனகராசா சரவணன்)

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில்; இனம் தெரியாத போதை பொருள் கடத்தல்காரரன  6 பேர் கொண்ட பெண்கள் தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினர் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டினுள் புகுந்து கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம் நேற்று திங்கட்கிழமை (11)  மாலையில் இடம்பெற்றள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான செய்தி ஒன்று இணையத்தள ஊடகம் ஒன்றில் வெளியானதாகவும் அந்தச் செய்தியை உடனடியாக இணையத்தளத்திலிருந்து அகற்றும்படி இரண்டு முச்சக்கரவண்டி மற்றும் மோட்டர்சைக்கிளில் சென்ற இனம் தெரியாத 6 பேர் கொண்ட பெண்கள் தலைமையிலான 20 பேருக்கு மேற்பட்ட போதை பொருள் கடத்தல்கார குழுவினர் வசந்தரூபன் என்ற ஊடகவியலாளர் வீட்டினுள் சம்பவதினமான நேற்று மாலை 4 மணிக்கு திடீரென வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

இவ்வாறு வீட்டுக்குள் புகுந்த ஊடகவியலாளரை அச்சுறுத்தியதுடன் அவரின் மோட்டார் சைக்கிளில் இருந்த திறப்பை எடுத்து தனது நெஞ்சுபகுதி ஆடையில் வைத்துவிட்டு  தன்னை பாலியல் துஸ்பிரயோம் செய்யவந்ததாக பொலிஸ் முறைப்பாடு செய்வேன் என சத்தமிட்டு கொலை செய்தவாக அச்சுறுத்தி குடும்பத்தினரை தாக்கமுயன்றுள்ள நிலையில் வீதியால் சென்றவர்கள் மற்றும் அயவர்கள் ஒன்று திரண்டதையடுத்து அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் உடனடியாக முறைப்பாடு செய்துள்ளதையடுத்து பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று நேரடியாக விசாரணைகளை மேற்கொண்டு விசாரணைகளை  செய்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

PHOTO-2023-12-11-23-18-19.jpg