சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு

ஹஸ்பர்_
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வானது இன்று (11) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
டிசம்பர் 09 முதல் டிசம்பர் 15 வரை சர்வதேச ஊழல் எதிர்ப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் ஊழலை ஒழிக்கும் நோக்கத்திற்காக டிசம்பர் 09 ம் திகதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக அறிவிக்கப்பட்டது.
லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதோடு, ஊழலை ஒழிக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுமே ஊழல் எதிர்ப்பு தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எஸ்.சுதாகரன் , பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.  குருகுலசூரிய, மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.