மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களுக்கு பொலிசாரின் நலன்புரி தேவைகளுக்காக 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான மின் உபகரணங்கள், துளிர்சாதனப் பெட்டிகள் தொலைக்காட்சிகள் கதிரை மெத்தை உட்பட பல பொருட்களை இன்று திங்கட்கிழமை(11) கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன சம்பிராய பூர்வமாக பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கி வைத்தார்.
மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று பொருட்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது இதில் அதிதியாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன, உதவி பொலிஸ் மா அதிபர், உதா என்.பி.லியனகே, பொலிஸ் அத்தியட்சகர். அமல்,ஏ.எதிர்மன்ன மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்துகொண்டு
14 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளிடம் 7.5 மில்லியன் ரூபா செலவில் குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிபெட்டி, சலவை இயந்திரம், மின்அழுத்தி, சமையல் பாத்திரங்கள், கிரிக்கட் மட்டை, பந்து, கரம்போட், மெத்தை மின்விசிறிகள், கதிரைகள் உட்பட்ட பொருட்களை சம்பிராய பூர்வமாக வழங்கிவைத்தனர்.